×

கடும் வெயிலால் வீடுகளுக்கு படையெடுக்கும் பாம்புகள்

போச்சம்பள்ளி, ஏப். 30: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்ப அலை வீசி வருவதால், வனப்பகுதியில் இருந்து பாம்புகள், எலி உள்ளிட்ட உயிரினங்கள், வெப்பத்தில் இருந்து தப்பிக்க அருகில் உள்ள வீடுகளுக்கு படையெடுக்கின்றன. போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள நகரம் மற்றும் கிராம பகுதிகளில், தற்போது குடியிருப்புகளுக்கு பாம்புகள் படையெடுத்து வருகிறது. இது குறித்து பொதுமக்கள் அளிக்கும் தகவலின் பேரில், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் பாம்புகளை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்து வருகிறார்கள். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘கொடிய விஷமுள்ள பாம்புகள் தான், வீடுகளுக்கு வருகின்றன. இதனை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டுக்குள் பாம்புகள் புகுந்தால், அதை துன்புறுத்தாமல் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாலை நேரத்தில் வீட்டில் முன் மற்றும் பின்புறக் கதவுகளை அதிக நேரம் திறந்து வைக்கக்கூடாது. மேலும், வீடுகளில் உள்ள ஜன்னல்களை நீண்ட நேரம் திறந்து வைக்கக்கூடாது,’ என்றனர்.

The post கடும் வெயிலால் வீடுகளுக்கு படையெடுக்கும் பாம்புகள் appeared first on Dinakaran.

Tags : Bochampalli ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED முட்டை விற்பனை ஜோர்